By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வறட்சி பாதித்த விவசாயிகளுக்கு முழு காப்பீடும் கடன் தள்ளுபடியும் வழங்க வேண்டும்: தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > வறட்சி பாதித்த விவசாயிகளுக்கு முழு காப்பீடும் கடன் தள்ளுபடியும் வழங்க வேண்டும்: தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்தல்
இராமநாதபுரம்தமிழ்நாடு

வறட்சி பாதித்த விவசாயிகளுக்கு முழு காப்பீடும் கடன் தள்ளுபடியும் வழங்க வேண்டும்: தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்தல்

Last updated: June 4, 2026 6:29 pm
June 4, 2026
5 Views
Share
SHARE

கமுதி, ஜூன் 4 –

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி, முதுகுளத்தூர், கடலாடி உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் கடந்த 2025ஆம் ஆண்டு நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் நன்கு வளர்ந்து கதிர்விடும் தருவாயில் மழை இல்லாத காரணத்தால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் விளைவாக ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் கருகி, விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்தனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம், முழுமையான பயிர் காப்பீட்டுத் தொகை மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி வழங்கக் கோரி கமுதி, சாயல்குடி, கடலாடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சார்பில் பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்களும் கோரிக்கை முழக்கங்களும் நடத்தப்பட்டன. ஆனால் அப்போதைய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என குறிபிட்டார்.

ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் விவசாயக் கடன் தள்ளுபடியும், பயிர் காப்பீட்டுத் தொகையும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இருந்த நிலையில், தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள கடன் தள்ளுபடி திட்டம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழுவின் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் தரைக்குடி முத்துராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

எனவே, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடியை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். மேலும், புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர், காப்பீட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் 100 சதவீத பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உடனடியாக காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டால்தான் விவசாயிகள் நம்பிக்கையுடன் இந்த ஆண்டு பருவமழையை முன்னிட்டு மீண்டும் விவசாயப் பணிகளைத் தொடங்க முடியும். மகாராஷ்டிரா அரசு செயல்படுத்தியுள்ள கடன் தள்ளுபடி திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம் முழுமையான காப்பீட்டுத் தொகையை பெற்றுத் தர வேண்டும் என்றும் விவசாயிகள் சார்பில் அவர் கேட்டுக்கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.536 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
தையாலுமூட்டில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்; எம். பி பங்கேற்பு
குமரி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 118 வது ஜெயந்தி; பழனி நாடார் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
ராமநாதபுரம் மாவட்ட அளவில் டேக்வாண்டோ போட்டியில் 115 மாணவ மாணவிகள் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கிள்ளியூர் திமுக சார்பில் சமத்துவ கோலப் போட்டி

January 14, 2026
36 Views
முதல்வர் மருந்தகத்தில் கலெக்டர் ஆய்வு !!
பள்ளி மாணவிகளிடம் ஆபாச பேச்சு. ஆசிரியர் மீது போக்சோ வழக்கு
திருப்பத்தூரில் கைவிடுவோம் பிளாஸ்டிக்கை
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account