தஞ்சாவூர், மே 22 –
காவிரி நதிநீர் வழக்கின் தீர்ப்பை செயல்படுத்த கடந்த காலத்தில் முயற்சி செய்யப்படாத நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவேரி உரிமை மீட்பு குழு வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் காவேரி உரிமை மீட்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தெரிவித்ததாவது: காவிரி நிதி நீர் வழக்கில் 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கர்நாடக அரசு ஒருபோதும் செயல்படுத்தியது இல்லை. தீர்ப்பை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு ஆட்சியாளர்கள் தொடர் முயற்சியிலேயே உரையாட நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஜோசப் விஜய் தலையில தலைமையிலான தமிழக அரசு காவிரி நதிநீர் பிரச்சினையில் உண்மையான அக்கறை காட்டி உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெங்களூர் 2026 மே 9ம் தேதி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கோபால் கவுர தலைமையில் கூடிய காவேரி குழு கூட்டத்தில் காவல்நீர் தமிழகத்திற்கு அதிக நேர் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் தாக்கல் மனு தாக்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். தமிழகத்தை புறக்கணிக்கவும் பழிவாங்கவும் கர்நாடகம் செயல்படுகிறது. எனவே புதிதாக அமைக்க உள்ள முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சி இதைக் கவனித்துக் கொண்டு 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை செயல்படுத்த புதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் உச்சநீதிமன்றம் அணுக வேண்டும்.
கூட்டத்தில் குழுவின் பொருளாளர் த.மணிமொழியின் குழு நிர்வாகிகள் ஜெகதீசன் சாமி, கரிகாலன், சீமியோன், சேவியர் ராஜ், கலைச்செல்வன், பொறியாளர் செந்தில் வேலன், வெள்ளாம் பெரம்பூர் துரை ரமேஷ், புண்ணியமூர்த்தி, தனசேகரன், வைகறை, பழ ராஜேந்திரன், விடுதலை சுடர் தென்னவன், திருச்சி கவித்துவன் வே.க.இலக்குவன், செம்மலர் தீந்தமிழன் ராமசாமி, ராசு, முணியாண்டி, மாரிமுத்து வல்லம் புதூர் பாலன், சுவாமிமலை திருஞானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



