சென்னை, மே 16 –
சிஐ இஎல் – எச்ஆர் பணியாளர்களின் பணிச்சுழற்சி முழுவதற்கும் தேவையான தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை வழங்கும் இந்தியாவின் ஒரே நிறுவனம் ஆகும். 37 இடங்களில் 83 அலுவலகங்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம், 1,450க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் 7,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு மனிதவளத்துறையில் விரிவான சேவைகளை வழங்கி வருகிறது.
2026 நிதியாண்டில் 32% வளர்ச்சியைப் பதிவு செய்து, அதன் வருவாயை கிட்டத்தட்ட ரூ.2,000 கோடியாக உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அத்துடன், எதிர்கால வேலைவாய்ப்புச் சூழலுக்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவு சார்ந்த பணியாளர் கட்டமைப்பு தளத்தை உருவாக்கும் நோக்கில் சிஐஇஎல் – எச்ஆர் 3.0: விஷன் 2030 என்ற புதிய வளர்ச்சித் திட்டத்தையும் அறிவித்திருக்கிறது.
இந்த மேம்பாட்டிற்கான மாற்றத்தின் ஒரு பகுதியாக, சிஐ இஎல் குழுமத்தின் ஜாம்பே (Jombay) நிறுவனம், அதன் செயற்கை நுண்ணறிவுதளத்தின் மூலம் பல்வேறு மனிதவள செயல்பாடுகளுக்கான கருவிகளை உருவாக்கியுள்ளது. மேலும், திறன் நுண்ணறிவு திறன்களை வலுப்படுத்தும் வகையில், சிஐ இஎல் குழுமத்தின் மற்றொரு நிறுவனமான ”தாமஸ் அசஸ்மெண்ட்ஸ் இந்தியா” செயற்கை நுண்ணறிவு சார்ந்த திறன் மதிப்பீட்டு தளத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த தளம், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட நடத்தைப் பண்புகள், கற்றல் தகுதி, உணர்வுசார் நுண்ணறிவு மற்றும் தலைமைத்துவ திறன் ஆகிய நான்கு உளவியல் திறன் மதிப்பீட்டு கருவிகளையும் ஒரே ஒருங்கிணைந்த தீர்வாக வழங்குகிறது.
இது குறித்து சிஐ இஎல் மனிதவள குழுமத்தின் நிர்வாகத் தலைவர் க.பாண்டியராஜன் கூறுகையில், மாஃபா முதல் சிஇஐஎல் வரையிலான பயணம் என்பது வெறும் வணிக வளர்ச்சியை மட்டுமே பிரதிபலிப்பதல்ல. இந்திய பணியாளர் சூழலின் பரிணாம வளர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது. சிஐஇஎல் – எச்ஆர்ஐ தொடங்கியபோது, தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் நிறுவனங்கள் திறமைகளை தேர்வு செய்வது, நிர்வகிப்பது மற்றும் மேம்படுத்துவது போன்ற செயல்முறைகளில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று நாங்கள் நம்பினோம்.
வேகமாக மாறிவரும் பணி உலகிற்கேற்ற நுண்ணறிவுமிக்க, ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான மனிதவள தீர்வுகளை மேலும் மேம்படுத்துவது மீது எங்கள் கவனம் இருக்கும்” என்றார்.



