தருமபுரி, மே 11 –
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட துணை தலைவர் சிவா தலைமையில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இதில் கடந்த மாதம் மேற்குவங்காளம், அசாம், புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில்
பெண்களின் கவுரவத்துக்காகவும், ஏழைகளின் நலனுக்காகவும் மக்கள் வாக்களித்து மேற்குவங்காளம், அசாம், புதுச்சேரி உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. இதில் கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் நத்தகிரி, ஒன்றிய மகளிர் அணி செயலாளர் பிரேமா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரேம் ஆனந்த், முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதேவி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், நகர கிளை தலைவர் பெரியண்ணன்,
நகர காளை செயலாளர் முருகன், அலகுபெருமாள் உள்ளிட்ட ஏராளமான பாஜக கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



