தேனி மாவட்டம், ஜூன் – 11
தேனி மாவட்டம், உத்தமபாளையம் புதூரில் மாட்டு தீவன வைக்கப்படப்பை தீ வைத்த சமூக விரோதிகளை கைது செய்யவேண்டியும் மாட்டு தீவன உரிமையாளர் முரளி மற்றும் முத்து ஆகியோருக்கு இழப்பீடு தொகை ரூ 5 – இலட்சம் வழங்கவும் பல்லவராயன் பட்டி ஹரிச்சந்திரன் சாவில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் மேலும் உத்தமபாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட சுக்காங்கல் பட்டியை சேர்ந்த விஷ்ணு என்ற அருந்ததிய இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கூறியும் அய்யம்பட்டி பட்டாளம்மன் கோவில் மீதான மோசடி பத்திரத்தை இரத்து செய்ய வேண்டியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் உத்தமபாளையம் பைபாஸில் நடைபெற்றது இந் நிகழ்வுக்கு சு.வைரமுத்து மாவட்ட செயலாளர் அவர்கள் தலைமை தாங்கினார் சா.பாண்டியன் மாவட்ட நிதிச் செயலாளர் S.முஹம்மது அசாருத்தீன் மனித நேய மக்கள் கட்சி தலைவர் சு.ராஜா முஹம்மது TNTJ போடி ஆகியோர் முன்னிலை வகித்தனர் நா.சு. மணிவண்ணன் மாவட்ட துணைச் செயலாளர் M. முபாரக் வி.சி.கா மாவட்ட பொருளாளர் ஆகியோர் கண்டன உரையாற்றினர் ரா.அரவிந்தன் மா.முத்துக் கிருஷ்ணன் ஆகியோர் நன்றியுரையாற்றினர் மேலும் இவ் ஆர்பாட்டத்துக்கு தமிழ் புலிகள் கட்சி முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்



