அருமனை, மார்ச் 30 –
கன்னியாகுமரி மாவட்டம் கடையால் மேலத்தெரு அருகே மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்காமல், ஆற்றுநீரை நேரடியாக குடிநீர் தொட்டியில் தேக்கி பொதுமக்களுக்கு விநியோகித்து வந்தனர். இதனால் மக்கள் நோய் தொற்றிற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது.
கடையால் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் தங்களுக்கு விநியோகிக்கப்படும் நீரோடு திரண்டு வந்தனர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். கோரிக்கைகளை கேட்டறிந்த செயல் அலுவலர் மாதத்திற்கு இருமுறை நீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்து அருகில் இருக்கும் பொதுமக்களிடம் கையெழுத்து பெற வேண்டும் என நடவடிக்கை எடுத்துள்ளார்.



