By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: செய்தியாளர் சந்திப்பில் கலெக்டர் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: செய்தியாளர் சந்திப்பில் கலெக்டர் தகவல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: செய்தியாளர் சந்திப்பில் கலெக்டர் தகவல்

Last updated: March 26, 2026 6:20 pm
March 26, 2026
51 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 26 –

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்டத்திற்குட்பட்ட பத்திரிக்கை, ஊடக செய்தியாளர்களுடான கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.

இந்த கலந்துரையாடலின் போது கலெக்டர் செய்தியாளர்களிடையே கூறியதாவது: குமரி மாவட்டத்தில் ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 15,10,550 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்கள் அனைவரும் தடையின்றி வாக்களிக்க வசதியாகப் வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக, முதல்முறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிக்கும் வகையில், மாவட்டத்தில் உள்ள 180 கல்லூரிகளிலும், சுற்றுலாத் தலங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நமது கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 7,700 ராணுவ வீரர்கள் ஆன்லைன் மூலம் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ‘படிவம் 12டி’ வழங்கப்பட்டு வருகிறது. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது‌ எனினும், பெரும்பாலான முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் நேரடியாக வாக்குச்சாவடிக்கே வந்து வாக்களிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் 1800-599-8010 மற்றும் தேர்தல் உதவி எண் 1950 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு எந்த நேரத்திலும் புகார் அளிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறை நாட்களான 31.03.2026, 01.04.2026, 03.04.2026, 05.04.2026 ஆகிய நாட்களை தவிர்த்து, வரும் 30.03.2026 அன்று முதல் 06.03.2026 வரை வேட்புமனு தாக்கல் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது.

கன்னியாகுமரி தொகுதிக்கு தோவாளை(இ) பூதப்பாண்டி வட்டாட்சியர் அலுவலகத்திலும், நாகர்கோவில் தொகுதிக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், குளச்சல் தொகுதிக்கு குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம், பத்மநாபபுரம் தொகுதிக்கு பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்திலும், விளவங்கோடு தொகுதிக்கு விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகம், கிள்ளியூர் தொகுதிக்கு கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெறப்படுகின்றன. ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்ய விரும்புவர்களுக்கும் மேற்குறிப்பிட்ட நேரமே பொருந்தும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது தேர்தல் விழிப்புணர்வு கண்காணிப்பு அலுவலர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, ஊடக கண்காணிப்பு மற்றும் ஊடக சான்று கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செல்வலெட் சுஷ்மா உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தேசிய நெடுஞ்சாலை பணிகள் விரைவில் தொடங்கும்
சுசீந்திரம் அருகே கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் நிறுவன அதிகாரி பரிதாப சாவு
சாலை பணியாளர் மீது தாக்குதல் விவசாயி மீது வழக்கு
காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கை
மக்களை தேடி மருத்துவம் திட்டம் தோல்வி. தளவாய் சுந்தரம் விமர்சனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

பவானி அருகே உள்ள ஓடத்துறையில் கிராம சபை கூட்டம்

October 5, 2024
85 Views
நடந்து சென்ற விவசாயி சாலையில் விழுந்து சாவு
இளைஞர் திறன் திருவிழாவில் 170 பேருக்கு பணி
35 – வது மாவட்ட மாநாடு குறித்துஆலோசனைக் கூட்டம்
நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account