குளச்சல், மார்ச் 16 –
மணவாளக்குறிச்சி, சாத்தன்விளை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் அலெக்ஸ் (44). இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். மீன்பிடி தொழிலாளியான இவருக்கு குளச்சல் பகுதியைச் சேர்ந்த மற்றொரு மீன்பிடி தொழிலாளி ஒருவரிடம் பழக்கம் உள்ளது. இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அலெக்ஸ் குளச்சல் உள்ள தனது நண்பன் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக நண்பரின் 11 வயதுடைய 6 ம் வகுப்பு படிக்கும் மாணவி மட்டும் இருந்துள்ளார். இதையடுத்து அலெக்ஸ் திடீரென பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி அங்கிருந்து வெளியே சென்று பெற்றோரிடம் புகார் கூறியுள்ளார்.
பெற்றோர் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி விசாரணை நடத்தி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அலெக்ஸ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



