சுசீந்திரம், மார். 12 –
சுசீந்திரம் அக்கரை பகுதியை சேர்ந்தவர் கோலப்பபிள்ளை (75). சமையல் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து பிள்ளைகள் இல்லை. வயது முதிர்வு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.
இந்த மன வேதனையில் இருந்தவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்த தென்னை மரத்திற்கு வைக்கக்கூடிய விஷ மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக மனைவி சுசீலாவிடம் கூறியுள்ளார். உடனே அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
சிகிச்சையில் இருந்த கோலப்பபிள்ளை சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து சுசீலா சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


