திருப்பூர், பிப். 27 –
திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருப்பூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ மகன் செ.திலக்ராஜ் திருப்பூர் மாநகர மாணவரணி அமைப்பாளராக உள்ளார்.
இவர் மாணவர் பருவத்தில் இருந்தே கழகத்தின் பணிகளை சிறப்பாக செய்து வருகிறார். அடுத்த தலைமுறைக்கான திருப்பூர் மாவட்டத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நம்பிக்கை கூறிய இளைஞராக வளம் வருகிறார்.
இவர் தற்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தெற்கு சட்டமன்ற உறுப்பினருக்கான தனது விண்ணப்ப மனுவை செலுத்தியுள்ளது. மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது. இவர் கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளைஞர்களின் தளபதி உதயநிதி ஸ்டாலின் வழியில் சிறப்பாக செயல்படுகிறார்.
வருங்கால கழக இளைஞர்களின் கையில் என்பது சிறப்பான விஷயம். இவர் ஏற்கனவே பல மக்கள் சேவைகளை செய்து வருகிறார். தன்னார்வமிக்க இவர் கழகத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருவது பல இளைஞர்களுக்கு முன்னுதாரனமாக திகழ்கிறது.
கொங்கு மண்டல தளபதி V.செந்தில் பாலாஜி மாணவர் அணி மாநில செயலாளர் ராஜீவ் காந்தி அவர்களால் பாராட்டப்பட்டவர். வருங்கால திருப்பூர் மாவட்டத்திற்கு அடுத்த தலைமுறை இளைஞர்களின் செயல் கழகத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது என திருப்பூர் திமுக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.



