நாகர்கோவில், ஜூன் 19 –
இலந்தையடிவிளை அரசு உயர்நிலைப்பள்ளியில், ஐந்தாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலும் உள்ள 193 மாணவ மாணவியர்களுக்கு 579 நோட் புத்தகங்கள் முகிலன் குடியிருப்பில் உள்ள ஆத்மபோதோதய சங்கம், ஸ்ரீ சுபானந்த ஜோதி ஆசிரமம் திருக்கோயில் சார்பில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் ஊர் தலைவருமான பார்த்தசாரதி தலைமை வகித்து மாணவ மாணவியருக்கு புத்தகங்கள் வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர் செம்பியன், இவிஎஸ் அமைப்பாளர் சந்துரு, ஆசிரமம் செயலாளர் சுரேஷ் கார்த்திக், ஊர் பொருளாளர் கிருஷ்ணகோபால் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



