By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கேரளாவில் சுகதாரத்துறை அமைச்சர் மீது தாக்குதல்: காங்கிரஸ் அலுவலகத்திற்கு தீ வைப்பு: பல இடங்களில் தொண்டர்கள் மோதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > அரசியல் > கேரளாவில் சுகதாரத்துறை அமைச்சர் மீது தாக்குதல்: காங்கிரஸ் அலுவலகத்திற்கு தீ வைப்பு: பல இடங்களில் தொண்டர்கள் மோதல்
அரசியல்இநஂதியாமாநிலம்

கேரளாவில் சுகதாரத்துறை அமைச்சர் மீது தாக்குதல்: காங்கிரஸ் அலுவலகத்திற்கு தீ வைப்பு: பல இடங்களில் தொண்டர்கள் மோதல்

Last updated: February 26, 2026 5:57 pm
February 26, 2026
36 Views
Share
SHARE

திருவனந்தபுரம், பிப். 26 –

கேரள மாநிலம் சுகாதாரத் துறை அமைச்சராக வீணா ஜார்ஜ் என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் கேரளாவில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறி சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் என்பவரை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது. அமைச்சர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி காண்பித்து போராட்டம் நடத்துகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அமைச்சர் வீணா ஜார்ஜ் கண்ணூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது அனைத்து நிகழ்ச்சிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி காண்பித்து போராட்டம் நடத்தினர். அதன்பிறகு அமைச்சர் திருவனந்தபுரம் திரும்புவதற்காக கண்ணூர் ரயில் நிலையத்திற்கு வந்தபோது அங்கும் காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் கருப்புக்கொடி காண்பித்து போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது போலீசுக்கும் போராட்டக்காரர்களுக்கு இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போராட்டக்காரர்களுடன் வீணா ஜார்ஜ் வாக்குவாதம் செய்தார். இந்த சமயத்தில் மாணவர் அமைப்பினர் அமைச்சர் வீணா ஜார்ஜை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவரது கழுத்திலும் கையிலும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவர் கண்ணூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது. சம்பவம் அறிந்தவுடன் கேரளா முதல்வர் பினராய் விஜயன் மருத்துவமனை சென்று வீணா ஜார்ஜை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

இதற்கு இடையே அமைச்சரை தாக்கியதை கண்டித்து மாநில முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென காங்கிரஸ் கட்சியின் கொடிக்கம்பங்கள், பேனர்கள் சேதப்படுத்தப்பட்டன. பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ், சிபிஎம் தொண்டர்கள் நேருக்கு நேர் மோதினார்கள். இந்த நிலையில் நள்ளிரவு கண்ணூர் அருகே கோடியேறி என்ற பகுதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு தீவைக்கப்பட்டது. இதை அறிந்ததும் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று தீய அணைத்தனர்.

இதற்கிடையே அமைச்சரை தாக்கிய காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் 5 பேரும், கருப்புக்கொடி காண்பித்த இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 பேர் என மொத்தம் 15 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவை மாநகராட்சியில் மாமன்ற சாதாரணக் கூட்டம்
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் விழா: மர சிற்ப வாகனங்கள் சீரமைப்பு தீவிரம்
அதங்கோடு கிருஷ்ணசுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம் மற்றும் திருக்கொடிமர பிரதிஷ்டை நாளை நடக்கிறது
ஆம்பூர் அருகே வடபுதுப்பட்டில் அருள்மிகு ஶ்ரீ திருப்பதி கெங்கையம்மன் திருவிழா
நாகர்கோவில் அருகே மின்வாரிய ஊழியர்கள் அலட்சியத்தால் நள்ளிரவில் சரிந்து விழுந்த ட்ரான்ஸ்பார்மர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குட்கா விற்பனையில் ஈடுபட்டவர் கைது

February 16, 2025
68 Views
நித்திரவிளை கடற்கரையில் மது அருந்திய 6 வாலிபர்கள் கைது
ஈரோடு மாணவர்கள் 11 பேர் தங்கம் வெள்ளி பதக்கம் பெற்று சாதனை
மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
பயணிகள் மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account