நாகர்கோவில், ஜூலை 23 –
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இந்து கல்லூரி முன்பு மூட்டா அமைப்பினர் மதிய நேர இடைவேளையில் மூட்ட்டா மத்திய பொருளாளர் ராஜ ஜெயசேகர் தலைமையில் வாயிற் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர் மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்,நீட் தேர்வை நிறுத்த செய்ய வேண்டும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு முறைகேடை விசாரிக்க வேண்டும்,NTA அமைப்பு நடத்துகின்ற தேர்வு தடைச் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர் மேலும் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காக்ரோச் ஜனதா பார்ட்டி அமைப்பு மற்றும் மாணவர் அமைப்புகளை கைது செய்து தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் மூட்டா அமைப்பினர் மற்றும் மாணவர்களுடன் இணைந்து போராட்டத்திலும் ஈடுப்பட்டதாகவும் தெரிவித்தார். அதேபோன்று தமிழக முழுவதும் மூட்டா அமைப்பு அந்தந்த கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதில் TANTSAC கிளை தோழர் திருவாழி மார்பன் கலந்து கொண்டார். மத்திய இணை பொதுச்செயலாளர் தோழர் ஷைலா குமாரி மற்றும் கிளை பொருளாளர் சுப்பையா போராட்ட விளக்கவுரை நிகழ்த்தினார். இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சந்துரு சிறப்புரையாற்றினார். கல்விக் குழு ஒருங்கினைப்பாளர் பொன்முருகராஜ் நன்றியுரை வழங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பேராசிரியர்கள், அலுவலர்கள், இந்திய மாணவர் சங்க பொறுப்பாளர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.



