By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேரணாம்பட்டு பகுதியில் தொடரும் மணல் கொள்ளை: தடுத்து நிறுத்தக் கோரி வேலூர் மாவட்ட எஸ்பியிடம் விவசாயிகள் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பேரணாம்பட்டு பகுதியில் தொடரும் மணல் கொள்ளை: தடுத்து நிறுத்தக் கோரி வேலூர் மாவட்ட எஸ்பியிடம் விவசாயிகள் மனு
குற்றம்தமிழ்நாடுவேலூர்

பேரணாம்பட்டு பகுதியில் தொடரும் மணல் கொள்ளை: தடுத்து நிறுத்தக் கோரி வேலூர் மாவட்ட எஸ்பியிடம் விவசாயிகள் மனு

Last updated: February 4, 2026 6:03 pm
February 4, 2026
68 Views
Share
SHARE

வேலூர், பிப். 04 –

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகா, மலட்டாறு படுகையில் நடைபெறும் தொடர் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) சார்பில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்தச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ். உதயகுமார் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பேரணாம்பட்டு தாலுகா, குண்டலப் பள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட அத்திக்குப்பம், சிவனகிரி, குடிப்பள்ளி, குண்டலப்பள்ளி போன்ற பகுதிகளில் பாயும் மலட்டாறு படுகையில், மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் சட்டவிரோதமாகத் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருகிறது.

இந்தத் தொடர் மணல் கொள்ளையினால் அப்பகுதியில் உள்ள தடுப்பணை சேதமடைந்து வருகிறது. மேலும், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதால், பஞ்சாயத்து பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயக் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் வற்றிப்போனதால் விவசாயத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள், அதனைத் தடுக்கும் விவசாயிகளின் நிலங்களுக்குள் புகுந்து தேங்காய், மாம்பழம் மற்றும் மின் மோட்டார் ஒயர்களைத் திருடிச் செல்கின்றனர். இதனால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பிற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர்.

ஆனந்தகிரி சோதனைச் சாவடி வழியாக முக்கியப் பிரமுகர்கள் வரும் நேரத்தில், காவல் துறையினரின் கவனம் திசைமாறும் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு இத்தகைய சமூக விரோதச் செயல்கள் தடையின்றி நடைபெறுகின்றன.

எனவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக தலையிட்டு, ஆனந்தகிரி சோதனைச் சாவடியில் கூடுதல் காவலர்களை நியமித்து, மலட்டாறு படுகையில் நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கொணவட்டம் ஹீரா மன்ஜில் இலவச கண் சிகிச்சை முகாம்
கே . ஈச்சம்பாடியில் வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்துச் செல்லும்போது வாகனங்களை மறித்து சாலை மறியல் ஈடுபட்ட 28 பேர் மீது வழக்குப் பதிவு
100 ஆண்டுகளைக் கண்ட செம்பொன்விளை அரசு தொடக்கப்பள்ளி: முப்பெரும் விழாவாக கொண்டாடிய முன்னாள் மாணவர்கள்
சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 2வது தெரு
திக்குறிச்சி கோயில் செல்லும் சாலையை சீரமைக்காததை கண்டித்து கல்வெட்டுக்கு அஞ்சலி செலுத்தி பசு மாடு மற்றும் தாமிரபரணி ஆற்றுக்கு மனு கொடுத்து நூதன போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குளச்சலில் தேர்தல் விதிமீறல்: பாஜ வேட்பாளர் உட்பட 55 பேர் மீது வழக்கு

April 6, 2026
49 Views
அழகி போட்டியில் வெற்றி பெற்ற பெண்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் சார்பில், அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றி
இரத்த ஸ்டெம் செல் கொடையாளர், பலனடைந்த சிறுவனுடன் சந்திப்பு
இறுதி கட்ட விறுவிறு வாக்கு சேகரிப்பில் வேப்பனப்பள்ளி தவெக வேட்பாளர் எஸ்.ஆர்.சம்பங்கி: 40 ஆழ்துளை கிணறுகளை அமைத்து தருவதாக வாக்குறுதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account