புதுக்கடை, ஜன. 7 –
புதுக்கடை அருகே விழுந்தயம்பலம், குஞ்சாக்கோடு பகுதியை சேர்ந்தவர் தங்கப்பன் மனைவி ஞான செல்வம் (60). இவர் நேற்று மாலை 5 மணி அளவில் அந்தப் பகுதியில் உள்ள நாகர் குளம் அருகில் வாய்க்காலில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது பதிவு எண் தெரியாத இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் வந்து குளித்துக் கொண்டிருந்த ஞான செல்வத்தின் கழுத்தில் கிடந்த ஐந்தரைப்பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.
உடனடியாக ஞான செல்வம் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் அந்த பகுதியில் வந்து பல்வேறு இடங்களில் தேடியும் திருடியவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து ஞான செல்வம் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


