மார்த்தாண்டம், ஜன. 3 –
கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோ கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. பொன்மனை, குலசேகரம், திற்பரப்பு பேரூராட்சிகள் மற்றும் பேச்சிப்பாறை, சுருளகோடு, அயக்கோடு உள்ளிட்ட ஊராட்சிகளுக்குட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முகாம் நடைபெற்றது.
இம்முகாம்களில் அடிப்படை மற்றும் உயர்நிலை மருத்துவப் பரிசோதனைகளுடன் முழுமையான உடல் ஆரோக்கியப் பரிசோதனைகள் உள்ளிட்ட 17 துறைகளைச் சார்ந்த நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. இன்று நடைபெற்ற மருத்துவ முகாமில் சுமார் 1800-க்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.
நடைபெற்ற மருத்துவ முகாமில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா கலந்து கொண்டு ஆய்வு நடத்தினார். சுகாதார அலுவலர் மரு.அரவிந்த், இணை இயக்குநர் மருத்துவம் மரு.சகாய ஸ்டீபன் ராஜ், ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.லியோ டேவிட், முகாம் ஒருங்கிணைப்பாளர் மரு.பிவீனா, வட்டார மருத்துவ அலுவலர் மரு.அருண், துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.



