திருப்பூர், டிசம்பர் 05 –
திருப்பூர் மாநகராட்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையும் மீறி பயன்படுத்துகிறவா்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருப்பூர் அரிசிக்கடை வீதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக மாநகராட்சிக்கு புகார் வந்தது. அதன்பேரில் துணை கமிஷனா் மகேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் குழு நேற்று அரிசிக்கடை வீதி, பூக்கடை வீதி, பெருமாள் கோவில் பகுதி, கே.எஸ்.சி. பள்ளி வீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனா்.
இதில் ஒரு முறை பயன்படுத்தப்படும் டம்ளர்கள் உள்ளிட்ட பொருட்கள் சுமார் 6 டன் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விற்பனையில் ஈடுபட்ட 15 கடை உரிமையாளா்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அழிக்கப்பட்டன. இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் அமித் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.



