By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குமரியில் SIR கணக்கீட்டு படிவம் திரும்ப வழங்காதவர் பெயர் வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெறாது; கலெக்டர் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் SIR கணக்கீட்டு படிவம் திரும்ப வழங்காதவர் பெயர் வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெறாது; கலெக்டர் தகவல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் SIR கணக்கீட்டு படிவம் திரும்ப வழங்காதவர் பெயர் வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெறாது; கலெக்டர் தகவல்

Last updated: November 27, 2025 5:56 pm
November 27, 2025
41 Views
Share
SHARE

நாகர்கோவில், நவம்பர் 27 –

குமரி மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் அழகுமீனா இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 தொகுதிகளில் மொத்தம் 15,92,872 வாக்காளர்கள் உள்ளனர். 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் 4ம் தேதி முதல் தற்போது வரை 15,61,354 கணக்கீட்டு படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்பட்டுள்ளது. இது மொத்த வாக்காளர்களில் 98.02 சதவீதம் ஆகும். இதில் 12,37,466 கணக்கிட்டு படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் திரும்பப் பெறப்பட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான செயலியில் பதிவேற்றமும் செய்யப்பட்டு மின்னணு மயமாக்கப்பட்டுள்ளது.

இது மொத்த வாக்காளர்களில் 77.69 சதவீதம் ஆகும். இவ்வாறு அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கிட்டு படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு, அவைகளை மின்னணு மயமாக்கும் பணியானது துரிதமாக நடைபெற்று வருகிறது.

தற்போது இதுவரை வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கணக்கீடு படிவங்களில், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் 46972 கணக்கீட்டு படிவங்களும், நாகர்கோவில் 75727, குளச்சல் 42525, பத்மநாபபுரம் 38806, விலவங்கோடு 43407, கிள்ளியூர் 22285, கணக்கீட்டு படிவங்களும் என மொத்தம் 2,69,722 கணக்கீட்டு படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படாமல் வாக்காளர்கள் வசம் உள்ளது.

எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள கணக்கீட்டு படிவங்களை திரும்ப வழங்காத அனைத்து வாக்காளர்களும் தங்கள் கணக்கீட்டு படிவங்களை உடனடியாக பூர்த்தி செய்து அந்தந்த பகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அல்லது வாக்குச்சாவடி முகவர்கள் ஆகியவரிடம் தங்கள் படிவங்களை அளித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி உங்களது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து திரும்ப ஒப்படைக்காத வாக்காளர்களின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது என்பதையும், இந்த படிவங்களை பூர்த்தி செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

அஞ்சல் வார விழாவை ஒட்டி நாகர்கோவிலில் பேரணி
புதுக்கடையில் செம்மண் கடத்திய டெம்போ பறிமுதல்
புனித ஆரோபண அன்னை ஆலய குருத்தோலை
மீனவ கிராமத்தில் கடல் சீற்றம்
வெறுப்பு பேச்சுகள் குற்றங்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் சட்டம் இயற்றப்பட வேண்டும் !
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சுசீந்திரம் அருகே தாயாரிடம் சாகப்போவதாக கூறி சென்ற வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

December 23, 2025
29 Views
மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி
EB போஸ்ட் விழுகின்ற நிலையில் உள்ளது
கிரியேட்டிவ் களம் , முதலுதவி சமூக நல அறக்கட்டளை சார்பில் பொள்ளாச்சியில் கோடை கண்காட்சி விழா!!!
குளச்சல் அருகே தண்ணீர் வாளியில் விழுந்த குழந்தை பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account