திருப்பூர், நவ. 20 –
திருப்பூர், அவினாசிலிங்கம் பாளையம் பகுதிய சேர்ந்த ராஜா, சுசிகலா தம்பதியினரின் மகனான சபரி ஆனந்த (14). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். பிறந்தது முதல் உடலின் பல்வேறு உபாதைகளால் நடக்க முடியாமல் இருந்து வந்த சபரி ஆனந்திற்கு அவர்களது பெற்றோர் பிசியோதெரபி செய்த போது சபரி ஆனந்திற்கு நீச்சல் போட்டியில் ஆர்வம் இருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து திருப்பூரில் உள்ள நீச்சல் பயிற்சி மையத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக நீச்சல் பயிற்சி முறைப்படி பயிற்சி எடுத்து வந்த நிலையில் கோவாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று தங்கம் என்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில் 25வது நேஷனல் பேரா ஒலிம்பிக் போட்டியானது ஹைதராபாத்தில் கடந்த 15,16,17, ஆகிய மூன்று நாட்கள் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவிலிருந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாற்றத்தினால் மாணவர்கள் 64 பேர் கலந்து கொண்ட நிலையில் சப்- ஜூனியர் போட்டியில் சபரி ஆனந்த் கலந்து கொண்டு மூன்று பிரிவுகளில் மூன்று தங்க பதக்கங்களை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதை அடுத்து தங்க பதக்கங்களை வென்ற சபரி ஆனந்த் ஹைதராபாத்தில் இருந்து ரயில் மூலம் திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தவரை அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள், “நாங்களும் இருக்கோம்” தொண்டு அமைப்பினர் கலந்து கொண்டு சபரி ஆனந்திற்கு வாழ்த்து சொல்லி பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.



