திருப்பூர், ஆக. 19 –
நம்ம சாமி, நம்ம கோவில் நாமே காப்போம் எனும் தலைப்பில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி பிரம்மாண்டமாக 1.50 லட்சம் இடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 15 லட்சம் வீடுகளில் கடந்த ஆண்டு விநாயகர் சிலை வைக்கப்பட்டது. இந்த ஆண்டு எண்ணிக்கை அதிகமாகும். ஐந்தே கால் லட்சம் ஏக்கர் கோவில் நிலத்தில் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் காணவில்லை. 7 ஆயிரம் கோவில்களில் பூஜை நடைபெறவில்லை. 6 ஆயிரம் கோவில் காணவில்லை. புதிய இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லை என்கிறார்கள். இந்துக்கள் ஒன்றுபடக்கூடாது என எதிர்பார்த்து செயல்படும் அரசாக உள்ளது.
திருச்செந்தூர் கோவிலில் ஊழல் நடைபெற்றுள்ளது. இது குறித்து அரசு விளக்க வேண்டும். விராலிமலை முருகன் கோவிலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆறுமுகம் என்பவர் கோவில் கோபுரத்தில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளார். இதற்கு பொறுப்பேற்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ராஜினாமா செய்ய வேண்டும். கோவில் நிலத்தில் உள்ள குளம் உள்ளிட்டவற்றை கண்டறிய அரசிடம் பலமுறை வலியுறுத்தி வருகிறோம்.
கோவில் குடமுழுக்கு ஆகம விதிகளின்படி நடைபெறவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த குடமுழுக்கு வரவு செலவு கணக்கு முறையாக வெளியிடப்படுவதில்லை. ஏராளமான முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் முதல்வர் கலந்து கொள்ள வேண்டும் என மெயில் அனுப்பி உள்ளோம். ரம்ஜானுக்கு கஞ்சி தயாரிக்க அரிசி வழங்கும் அரசு விநாயகர் சதுர்த்தி விழாவில் அனைத்து வீடுகளுக்கும் விநாயகர் சிலை வழங்க வேண்டும்.
இந்த விழாவை தடுக்க பல்வேறு முயற்சி நடைபெற்று வருகிறது. நாடு சுதந்திரம் அடைய காரணமே விநாயகர் சதுர்த்தி தான். தமிழகத்தில் இந்துக்களை ஒன்றிணைக்கவே விநாயகர் சதுர்த்தி விழா நடத்தப்படுகிறது. இந்துக்கள் ஒன்றிணைத்தால் முதல்வர் பாதயாத்திரை செல்வார். ரசாயனம் கலந்து செய்யப்படும் விநாயகர் சிலைகள் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



