By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 15 மாத ஆண் குழந்தையை கொலை செய்த கள்ளக்காதலன் மற்றும் தாய்க்கு ஆயுள் தண்டனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 15 மாத ஆண் குழந்தையை கொலை செய்த கள்ளக்காதலன் மற்றும் தாய்க்கு ஆயுள் தண்டனை
கனஂனியாகுமரி

15 மாத ஆண் குழந்தையை கொலை செய்த கள்ளக்காதலன் மற்றும் தாய்க்கு ஆயுள் தண்டனை

Last updated: September 24, 2025 8:36 pm
September 24, 2025
67 Views
Share
SHARE

நாகர்கோவில், செப். 24 –

அஞ்சுகிராமம் அருகே உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த 15 மாத ஆண் குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த கள்ளக்காதலன் மற்றும் தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட் தீர்ப்பளித்தது.

தூத்தூர் இரயுமன்துறை பகுதியை சேர்ந்தவர் பிரபுஷா ( 23). திருமணமான இவருக்கு 2 மகன்கள் உண்டு. பிரபுஷா வீட்டின் அருகே ஓட்டல் நடத்தி வந்த காஞ்சாம்புறத்தைச் சேர்ந்த சதாம் உசைன் (32) என்பவருக்கும், பிரபுஷாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. சதாம் உசைன் ஏற்கனவே மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இதை பிரபுஷாவின் கணவர் கண்டித்தார். ஆனால் பிரபுஷா மற்றும் சதாம் உசைன் இருவரும் தங்கள் கள்ளத் தொடர்பை கைவிடவில்லை. இதனால் பிரபுஷாவை அவருடைய கணவர் பிரிந்து முதல் குழந்தையை தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார். இளைய மகனான பிறந்து 15 மாதங்களே ஆன அரிஸ்டோ பியூலஸ் என்ற குழந்தை பிரபுஷாவுடன் இருந்தான்.

பின்னர் கள்ளக்காதல் ஜோடியானது குஜராத், தூத்துக்குடி போன்ற இடங்களுக்குச் சென்று உல்லாசமாக இருந்தது. கடந்த 14-11-2023 அன்று மயிலாடியில் உள்ள கோழிப் பண்ணையில் 2 பேரும் வேலைக்குச் சேர்ந்தனர். அப்போது தாங்கள் இருவரும் கணவன்-மனைவி என்றும் குழந்தை தங்களது குழந்தை என்றும் கூறியுள்ளனர். அங்கு 2 நாட்கள் தங்கி வேலை செய்தனர்.

அப்போதும் சதாம் உசைனும், பிரபுஷாவும் உல்லாசமாக இருந்தபோது குழந்தை அழுது தொந்தரவு செய்ததால் அரிஸ்டோ பியூலசை கம்பால் சதாம் உசைன் பலமுறை தாக்கியுள்ளார். அதோடு மட்டும் இல்லாமல் அடுத்தடுத்த நாட்களில் குழந்தையை மிகவும் கொடுமைப்படுத்தியுள்ளனர். குழந்தையை தூங்க வைப்பதற்கு மதுபானம் கொடுத்துள்ளனர்.

மேலும் சிகரெட்டால் குழந்தையின் உடம்பில் சூடு வைத்துள்ளனர். மேலும் ஆத்திரம் தீராத சதாம் உசைன் குழந்தையை தூக்கி தரையில் வீசியுள்ளான். மேலும் குழந்தையின் வாயில் சோறை தினித்து கரண்டியால் குத்தியுள்ளார். அதிலும் ஆத்திரம் தீராத சதாம் உசேன் பலமுறை தரையில் வீசி எறிந்ததால் குழந்தைக்கு விலா எலும்பு முறிந்துள்ளது. இந்தக் கோரச் சம்பவம் குழந்தையின் தாயான பிரபுஷா கண்முன்னே அரங்கேறியது. எனினும் அவர் கண்டுகொள்ளாமல் அதற்கு உடந்தையாக இருந்துள்ளார். பின்னர் குழந்தை மயக்க நிலை அடைந்ததால் கோட்டாரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு 16-11-2023 அன்று இரவு 11 மணிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன் குற்றம் சாட்டப்பட்ட சதாம் உசேன் மற்றும் பிரபுஷாவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு தரப்பில்வக்கீல் லீனஸ்ராஜ் ஆஜரானார்.

விளம்பரம்

You Might Also Like

இரணியல் அருகே நர்சு வீட்டில் ஆடுகள் மர்மச் சாவு
குலசேகரம் அருகே கல்லூரி மாணவி மாயம் – புகார்
திமுக இளைஞர் அணி சார்பில் கன்னியாகுமரியில் பொதுக்கூட்டம்
குமரியில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல்: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த விவகாரம்: வழக்கை மறு விசாரணை செய்ய கேட்டு நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்தில் பெண் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்நாடாளுமன்ற தேர்தல்-2024வேலூர்

வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் மூன்று பஞ்சாயத்துகளிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும்

May 6, 2024
157 Views
குமரி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு கட்டுப்பாடு: விஐபிகளுக்கு முன்னுரிமையா? சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
தமிழச்சி தங்கபாண்டியன் வாக்களித்த மக்களுக்கு நன்றி
பள்ளியாடி அருகே ஆட்டோவில் பயணித்த 4 பேருக்கு அரிவாள் வெட்டு: 5 பேர் மீது வழக்கு
வெனிசுலா அதிபர் கைது: கருங்கலில் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account