நாகர்கோவில், செப். 15 –
ராஜாக்கமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூவன்குடியிருப்பு பகுதியில் சம்பகுளம் உள்ளது. கடந்த 4 தினங்கள் குளத்தில் தலை இல்லாத நிலையில் பச்சிளம் குழந்தையின் உடல் கிடந்தது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் பென்சியா பிரைட் என்பவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு உடனடியாக ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிராம அலுவலரின் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தலை இல்லாத நிலையில் காணப்பட்ட குழந்தை சுமார் 1 மாத குழந்தை என தெரிய வந்தது.
இந்த வழக்கை விசாரிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. ஒரு மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் இளம் பெண் வருவதை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தொடர் விசாரணையில் அந்த பெண் ஈத்தாமொழி பகுதியை சேர்ந்த ரேகா (38) என்பது தெரிய வந்தது. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்ட காரணமாக கடந்த 11 ஆண்டுகளாக கணவரை விட்டு பிரிந்து தனது தாயாருடன் ரேகா வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் ரேகாவிற்கு அதே பகுதி சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகியதால் கர்ப்பமாகி குழந்தையும் பிறந்துள்ளது. இது வெளியே தெரிந்தால் அவமானமாகிவிடும் என்று நினைத்த ரேகா குழந்தையை கொலை செய்து யாருக்கும் தெரியாமல் குளத்தில் வீசி விட்டு சென்றுள்ளார். ஆனால் இதற்கிடையில் குழந்தையின் உடல் மிதந்த நிலையில் இவர் போலீசார் கையில் சிக்கி உள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


