By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவண்ணாமலையில் அனுமதியற்ற விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும்; அதிகாரிகள் எச்சரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவண்ணாமலை > திருவண்ணாமலையில் அனுமதியற்ற விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும்; அதிகாரிகள் எச்சரிக்கை
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் அனுமதியற்ற விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும்; அதிகாரிகள் எச்சரிக்கை

Last updated: September 13, 2025 5:58 pm
September 13, 2025
53 Views
Share
SHARE

திருவண்ணாமலை, செப். 13 –

திருவண்ணாமலை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பெருங்குப்பை உற்பத்தியாவர்களுக்கான ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை எதிரிலுள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரங்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் எஸ். செல்வபாலாஜி தலைமையில் நடந்தது. துணை மேயர் சு. ராஜாங்கம், வார்டு உறுப்பினர் அருணாரவி ஆகியோர் முன்னிலை வகிக்க சுகாதார ஆய்வாளர் வி.எம். மால்முருகன் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக மூத்தோர் தடகள சங்க மாநில துணைத்தலைவர் ப. கார்த்திவேல்மாறன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் ஓட்டல் சங்கம், வணிகர்கள் சங்கம். பூ ‘வியாபாரிகள் சங்கம், ஜவுளி வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினர்.

கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், திருவண்ணாமலை மாநகர பகுதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதால் சாலையோரம் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும். மாநகராட்சியில் குப்பை தொட்டிகள் வைக்க அனுமதி இல்லை. எனவே இதனை வணிகர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். வீடு, வீடாக குப்பைகளை வாங்க வரும் தூய்மை பணியாளர்களிடம் குப்பைகளை வழங்க வேண்டும். பூட்டி சீல் வைக்கப்படும் மாநகராட்சி நிர்வாகம் மூலம் குப்பைகளில் இயற்கை உரம் தயார் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. வணிக நிறுவனங்கள் மூலம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். பெரிய ஓட்டல் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் தங்கள் இடத்தில் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கலாம். இதற்கு தேவையான பயிற்சிகளை மாநகராட்சிநிர்வாகம் மூலம் வழங்க தயாராக உள்ளோம் என்றனர்.

மேலும் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் எஸ். செல்வபாலாஜியிடம் மாநகர ஹோட்டல்கள் சங்க நிர்வாகிகள் தலைவர் என். விஜயராஜ், செயலாளர் ஏ. நாகராஜன், பொருளாளர் கே. சதீஷ் ஆகியோர் மனு அளித்தனர். இந்த மனு மீது பதிலளிக்கையில் திருவண்ணாமலை மாநகராட்சி பகுதியில் உரிய அனுமதியின்றி தங்கும் விடுதிகள் (ஹோம் ஸ்டே) செயல்படுகிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே உரிய அனுமதி பெற்று நடத்த வேண்டும். அனுமதியின்றி செயல்பட்டால் சட்டப்படி பூட்டிசீல் வைக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.டி.ஆர். பாபு பேசுகையில் மாநக பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த மாநராட்சி ஆணையாளர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆலோசனை கூட்டத்தில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி டீன் மோகன்காந்தி, மாநகர பகுதி பொறுப்பாளர் ஷெரீப், வணிகர் சங்க நிர்வாகிகள் எஸ்.டி. தனக்கோட்டி, இரவிசந்திரன், சங்கர், அம்பிகாபதி சந்திரன், சுகாதார ஆய்வாளர் ரமணன், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் பி. தமிழரசி, துப்புரவு மேற்பார்வையாளர்கள் டி. தியாகராஜன், கே. கனகராஜ், சி. வெங்கடேசன், சி. முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவண்ணாமலையில் உள்ள தியாகி அண்ணாமலை அரசு மேல்நிலைப்பள்ளி
தண்டராம்பட்டில் மகளிர் சுய உதவி குழு பொருட்கள் உற்பத்தி: கலெக்டர் நேரில் ஆய்வு
புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள்
திருவண்ணாமலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குணமடைய வேண்டி தர்காவில் கூட்டுப் பிரார்த்தனை
நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யாவிட்டால் முற்றுகைப் போராட்டம்

March 14, 2025
54 Views
100நாள் வேலை தமிழ்நாட்டிற்கு ரூ.4034கோடி
திருவள்ளூரில் SBI-ன் 70 வது ஆண்டு விழாவை முன்னிட்டு 1 கோடியே 56 லட்சம் மதிப்பிலான வங்கிக் கடன் வழங்கும் நிகழ்ச்சி
மார்த்தாண்டம் பெட்டிக்கடையில் புகையிலை விற்பனை – 2 பேர் கைது
மதுரை மாமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account