தருமபுரி மாவட்டத்தில் 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா 2024 தருமபுரியில் உள்ள ஜோதி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட அளவிலான அரசு விழாவில் வேளாண் மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்கள் கூட்டுறவுத்துறை யின் கொடியை ஏற்றி வைத்தார். மேலும் பயனாளிகளுக்கு பல்வேறு கடன் உதவிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கி. சாந்தி, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஸ்வரன், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி. கே. மணி, நகர மன்ற தலைவர் லட்சுமி மாது, தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பழனியப்பன் மற்றும் மாவட்ட கூட்டுறவுத்துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



