சென்னை, ஆகஸ்ட் – 13
கட்டாய காதல் செய்யுமாறு லிஸியா என்ற பெண் வற்புறுத்த, சாமுவேல் (வயது 25)என்ற இளைஞர் மறுக்கவே முடிவில் ரூ. 7.5 இலட்சம் தருமாறு சிட்லபாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்ததின் பேரில், பாதிக்கப்பட்ட இளைஞருக்காகசர்வதேச குற்ற எதிர்ப்பு சங்கத்திற்கான சமூக நீதி, இந்திய சிவில் மற்றும் மனித உரிமைகள் கவுன்சில் நிறுவனர் சாம்பிரவீன், தேசிய தலைவர் பிரமினா எஸ்.குமார் ஆகியோரின் ஏற்பாட்டில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.அதில் சாம்பிரவீன் தெரிவித்ததாவது:-
சென்னை அடுத்த சேலையூர் ஜோயல் கார்டன்ஸ் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல். 25 வயதான இவர் அவரது தாயார், இளைய சகோதார் என குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
சாமுவேல் சேலையூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, சக பணியாளரான ராயப்பேட்டையை சேர்ந்த லிஸியா பகவன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்களாக பழகி வந்தநிலையில், ஒருவருக்கொருவர் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி வந்துள்ளனர். இந்த நிலையில் இளம்பெண் லிஸியா குடும்பச் சூழல் காரணமாக அடிக்கடி சாமுவேலிடம் பணம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் தன்னை காதலிக்குமாறு அந்த பெண் வற்புறுத்திய நிலையில் சாமுவேல் மறுத்துள்ளார். இதையடுத்து இருவரும் தியேட்டருக்கு சென்றபோது ஒன்றாக எடுத்த புகைப்படங்களை காட்டி, தன்னை சாமுவேல் திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதாக சிட்லப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து ரவுடிகள் மூலமாக தன்னை மிரட்டி ரூ.15 லட்சம் வரை பணம் கேட்டதாகவும் இதற்கு போலீசாரும் உடந்தையாக இருப்பதாகவும் சாமுவேல் புகார் அளித்துள்ளார்.
இவருடைய புகாருக்கு சி.எஸ்.ஆர் எதுவும் பதிவு செய்யாமல் லிசியா கொடுத்த புகாரை உடனே கையிலெடுத்து விசாரணைக்கு என்ற பெயரில் அவரது குடும்பத்தை மன உளச்சலுக்கு ஆளாக்கி வருகின்றனர்.
லிஸியாவின் வசிப்பிடம் இராயப்பேட்டை என்கிற போது இராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரை அளிக்காமல் சம்பந்தமே இல்லாத சிட்லப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரை அளித்திருக்கிறார்.
இச்சதியில் காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறது ஊர்ஜிதமாக தெரிகிறது.
லிஸியா வேறொரு காவல் நிலைய ஆய்வாளர் மோகன்ராம் உதவியோடு தான் இந்த நாடகத்தை நடத்தி கொண்டிருக்கிறார். சேலையூர் உதவி ஆணையர் ஒருவாரத்திற்கு முன்பு சாமுவேல் – ஐ மிரட்டி நாளை காலை லிஸியாவை திருமணம் செய்யவில்லை என்றால் சிறையில் அடைத்துவிடுவேன், என்கவுண்டர் செய்து விடுவேன் என்றும் மிரட்டியிருக்கிறார். அதுமட்டுமல்லாது அவரது தாயாரையும், சகோதரரையும் கேவலமாக பேசியிருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க விஸியாவின் தாய் மற்றும் உறவினர்கள் சாமுவேல் வீட்டிற்கு சென்று அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்க்க கெட்ட வார்த்தை பேசி தகராறு செய்திருக்கிறார்கள்.
சாமுவேல் உடனே
அவசர எண் – 100க்கு தகவல் தெரிவித்து போலீஸ் அங்கு வருவதற்குள் அங்கிருந்து தகராறு செய்தவர்கள் ஒட்டம் பிடித்திருக்கின்றனர்.
சிட்லபாக்கம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமி விசாரணை என்ற பெயரில் சாமுவேல், அவரது தாயார். சகோதரரையும் கடுமையாக தாக்கியும், தகாத வார்த்தைகளால் திட்டியும் மன உளச்சலை ஏற்படுத்தியிருக்கிறார்.
சாமுவேலுக்கு இருக்சகா வாகனத்தில் சென்ற விபத்து ஏற்பட்டு கையில் காயத்திற்கு கட்டு போட்ட நிலையில், ஆய்வாளர் ஜெயலட்சுமி, உதவி ஆணையர் ஆகியோர் கையை பிடித்து கட்டை பிரித்து கை முறுக்கி துன்புறுத்தியிருக்கிறார்கள்.
இது தொடர்பாக
துணை ஆணையரிடம் இந்த புகார் குறித்து மனு அளிக்க சென்ற போது துணை ஆணையர் அலுவலகத்தில் ஆணையாளரின் உதவியாளரான ஆய்வாளர் புகழேந்தி துணை ஆணையரை சந்திக்க விடாமல் மீண்டும் சிட்லபாக்கம் காவல் நிலையத்திற்கே உங்கள் மனு திருப்பி அனுப்பியிருக்கிறது
என்று கூறி எங்களை அலைகழிக்க விட்டார். காவல்துறை அதிகாரிகள், லிஸியாவின் தாயார், அவருடைய உறவினர், நண்பர்கள் என்ற போர்வையில் ரவுடிகளை வைத்து மிரட்டியும், தாக்கியும் அனைத்து தரப்பினரும் அவர்களை மன உளச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள் .
லிசியா அதே காலகட்டத்தில் உடன் பணிபுரிந்த பாலகுமார் என்பவருடன் 6 மாதங்கள் லிவிங் டூ கெதர் என்று ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள் . பிறகு இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு இராயபேட்டை காவல் நிலையத்தில் சமரசம் ஏற்பட்டு பாலகுமார் என்பவரிடம் ரூ.5 இலட்சம் இழப்பீடு பெற்றிருக்கிறார்கள். இப்போது அவர் சென்னையை விட்டு சென்றுவிட்டார். பிறகுதான் சாமுவேலுக்கு அதே பாணியில் டார்ச்சர் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இவரோ லிஸியாவிடம் தனிமையாகவோ, உடலுறவிலோ இருந்ததில்லை. அவசியம் ஏற்பாட்டால் மருத்துவ பரிசோதனைக்கு தயாராக இருக்கிறார். இவர் அப்பாவியாக இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு இவரை பேரம் பேசி மிரட்டுகின்றனர்.
ஆகவே இவர் மீது வீணாக பழி சுமத்திய லிசியா அவரது தாயார், இவர்களின் சதி செயலுக்கு உறுதுணையாக இருக்கும் காவல்துறை அதிகாரிகள், நண்பர்கள் போர்வையில் இருக்கும் ரவுடிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு இச்செய்தி அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.



