கனஂனியாகுமரி, செப்டம்பர் 23 –
அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி, பூஜைபுரவிளை ஊர் தலக்குளம் படித்துறைக்கு கிழக்கு பகுதியில் தார்சாலை அமைக்கும் பணியை அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவர் அன்பரசி ராமராஜன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு ஆகியோர் துவக்கி வைத்தார்கள். அகஸ்தீஸ்வரம் பேரூர் திமுக பொறுப்பாளர் விஜய கங்காதரன் முன்னிலை வகித்தார்.
கவுன்சிலர்கள் பிரபா, சந்திரா, தனலெட்சுமி, பிரேம் ஆனந்த், குமரேசன், செல்வராஜ், பேரூர் பொருளாளர் சுயம்புலிங்கம், கழக முன்னோடி செல்லதுரை, கழக நிர்வாகிகள் ராஜதுரை, துரைப்பழம், தேவகி, பொறியாளர் ராஜரமேஷ், ஒப்பந்ததாரர் சுதாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



