திருச்சி, ஏப்ரல் 22 –
துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 297 வாக்குப்பதிவு மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நகராட்சி அலுவலகத்திலிருந்து தனித்தனி வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் நடத்தும் அலுவலர் மணிமாறன் தலைமையில் தேர்தல் அலுவலர்கள் இந்தப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இது தேர்தல் பணிகளின் முக்கிய கட்டமாகும்.



