By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சாக்லேட் கொடுத்து ஆசை காட்டிய வேன் டிரைவர் கைது!!! பள்ளி மைதானத்தில் அரங்கேறிய அநாகரீகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சாக்லேட் கொடுத்து ஆசை காட்டிய வேன் டிரைவர் கைது!!! பள்ளி மைதானத்தில் அரங்கேறிய அநாகரீகம்
குற்றம்கோயம்புத்தூர்தமிழ்நாடு

6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சாக்லேட் கொடுத்து ஆசை காட்டிய வேன் டிரைவர் கைது!!! பள்ளி மைதானத்தில் அரங்கேறிய அநாகரீகம்

Last updated: May 15, 2026 4:13 pm
May 15, 2026
14 Views
Share
SHARE

கோவை, மே 15 –

கோவை பீளமேடு பகுதியில் வசித்து வரும் 6 வயது சிறுமிக்கு, அவர் பயிலும் பள்ளியில் ஆர் ஜி டிராவல்ஸ் என்ற தனியார் வேன் ஓட்டுநர், சோமனூர் பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் பாலியல் வன்கொடுமை இழைத்த கொடூரச் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கணவரை இழந்த நிலையில், பிழைப்பிற்காகப் பெங்களூருவில் ஹோம் நர்சிங் வேலை பார்த்து வரும் சிறுமியின் தாய், தனது மகளைக் கோவையில் உள்ள தனது பெற்றோரிடம் விட்டுச் சென்று உள்ளார்.

இந்நிலையில் கோடை விடுமுறைக்காகச் சிறுமியைத் தன்னுடன் பெங்களூருவிற்கு அழைத்துச் சென்ற போது தான், அந்தச் பிஞ்சு உள்ளத்தைச் சிதைத்த பகீர் உண்மைகள் ஒவ்வொன்றாகத் தெரியவந்து உள்ளது. சிறுமிக்குச் சிறுநீர் கழிக்கும் போது வலிப்பதாகக் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய், மகளைப் பரிசோதித்த போது அந்தப் பகுதியில் காயம் இருப்பதைக் கண்டு துடிதுடித்துப் போனார்.

இது குறித்துச் சிறுமியிடம் மெதுவாக விசாரித்த போது, அவர் முதலாம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்தே பள்ளி முடிந்ததும் மாலையில் வேன் ஓட்டுநர் கணேசன் என்பவர், பள்ளி மைதானத்தில் வைத்துத் தனக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கண்ணீருடன் தெரிவித்து உள்ளார். “யாரிடமாவது சொன்னால் உன்னைக் கொன்று விடுவேன்” என அந்தச் சிறுமியை மிரட்டியதோடு, சாக்லேட் கொடுத்து வாயடைக்க முயன்ற அந்த காமக் கொடூரனின் செயல் ஒட்டுமொத்தப் பெற்றோரையும் திடுக்கிட வைத்து உள்ளது.

பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, சிறுமியின் தாய் கோவை புலியகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், உடனடியாக பள்ளி வேன் ஓட்டுநர் கணேசனைக் கைது செய்தனர்.

அவர் மீது போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வாகனங்களிலேயே குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தலைமை விநாயகர் நண்பர்கள் குழு சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா
கோவை எஸ்.எஸ். குளம் ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் இலவச சிறப்பு மருத்துவ முகாம்
எஸ்டிபிஐ கட்சி மாவட்ட நிர்வாகி ஜாபர் சாதிக் மீதான அநீதியான கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது!
புதுக்கடை அருகே கடனாக கொடுத்த பணம் நகைகளை திருப்பி கேட்டவர்கள் மீது தாக்கு: 3 பேர் மீது வழக்கு
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நாகர்கோவிலில் மது போதையில் தகராறு; வாலிபர் மர்ம சாவு விவகாரத்தில் நண்பர்களிடம் விசாரணை

July 22, 2025
66 Views
மயிலாடுதுறையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா
முரசொலி செல்வம் மறைவிற்கு அஞ்சலி
வன்முறையை தூண்டும் விதமாக ரீல்ஸ், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account