தென்தாமரைகுளம், ஏப். 28 –
முகிலன்குடியிருப்பு பொன் சிவசுடலைமாட சுவாமி மற்றும் பொன் நாகலிங்கேஸ்வரர் திருக்கோயில் சித்திரைக் கொடைவிழா நாளை 29ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 2ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது.
முதல் நாள் அதிகாலை காலை 5 மணிக்கு : திருநடை திறப்பு, 5.30 மணிக்கு மங்கள இசை, மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு தீபாராதனை 9 மணிக்கு
சமபந்தி விருந்தும் நடக்கிறது.
இரண்டாம் நாள் 30ம் தேதி அதிகாலை 5 மணிக்கு திருநடை திறப்பு, 5.30 மணி : மங்கள இசை, மாலை 5.30 மணிக்கு நாதஸ்வரம், இரவு 8 மணிக்கு சமபந்தி விருந்து, இரவு 8. 30 மணிக்கு நாதஸ்வரம், 9 மணிக்கு வில்லிசை, இரவு 10 மணிக்கு பொன் நாகலிங்கேஸ்வரர் சுவாமிக்கு பூஜை, 11 மணிக்கு பெருமாள் சுவாமிக்கு அலங்கார பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு பொன் சிவசுடலை மாடசுவாமிக்கு அலங்கார பூஜையும் நடக்கிறது.
மூன்றாம் நாளான 1-ம் தேதி காலை 6 மணிக்கு நாதஸ்வரம், 8 மணிக்கு சிற்றுண்டி வழங்குதல்,
9.30 மணிக்கு நாதஸ்வரம், 10 மணி மகுடகச்சேரி, 11 மணிக்கு பெரிய நாயகி, நாகலிங்கேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு பூஜை, நண்பகல் 12.30 மணிக்கு சமபந்தி விருந்து, பிற்பகல் 1 மணிக்கு பொன் சிவசுடலை மாடசுவாமிக்கும், பொன் கழுக்கார முண்டன் சுவாமிக்கும் அலங்கார பூஜை, மாலை 3.30 மணிக்கு நாதஸ்வரம், 4 மணிக்கு வில்லிசை, 5.30 மணிக்கு பொன் செங்கிடாக்கார சுவாமிக்கு அலங்கார பூஜை, இரவு 7 மணிக்கு மகுடகச்சேரி, 8 மணிக்கு பொன்கட்டையேறும் பெருமாள் சுவாமிக்கு அலங்கார பூஜை, 8.30 மணிக்கு சமபந்தி விருந்து, 10 மணிக்கு நாதஸ்வரம், 10.30 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு பொன் சிவசுடலை மாடசுவாமிக்கு அர்த்தசாம பூஜையும் நடக்கிறது.
நான்காம் நாளான 2-ம் தேதி காலை 8 மணிக்கு அமுது படைத்தலுடன் பூஜையும், 9மணிக்கு சமபந்தி விருந்துடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர்கள் செய்துள்ளனர்.



