வேலூர்_03
வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டை, பின்புறம் ஸ்ரீராம ஸ்ரீஜெயகருடாழ்வார் 54ம் ஆண்டு குருபூஜை விழா, சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று ஐந்து வகையான அன்னதானங்கள் வழங்கப்பட்டு, விழா ஏற்பாட்டாளர் பாட்டாளி மக்கள் கட்சி, மாவட்ட அமைப்பு தலைவர் – வன்னியர் சங்கம் டி.எஸ்.தண்டபாணி தலைமையில் விமர்சியாக நடைபெற்றது.
வேலூரில் ஸ்ரீராம ஸ்ரீஜெயகருடாழ்வார் சன்னதி வரலாறு: வேலூர் கோட்டை கோயில் பின்புறம் மேற்கு அகழிழி பகுதியில் 1970ம் ஆண்டு ஸ்ரீராம ஸ்ரீஜெயகருடாழ்வார் சன்னதியாக நிறுவிய குருக்கள்… தங்கவேலு கவுண்டர், தியாகராஜ முதலியார், ஜெயராம செட்டியார், வேணுகோபால் செட்டியார், என்.தணிகாசலம் முதலியார் (வெல்லம் மண்டி) ஆகியோர்களால் இந்த ஸ்ரீராம ஸ்ரீ கருடாழ்வார் சன்னதி நிறுவப்பட்டு இதற்கு ஆண்டுதோறும் குரு பூஜைகள் நடைபெற்று வருகின்றது. ஸ்ரீராம ஸ்ரீகருடாழ்வாரின் மற்றும் வீரஆஞ்சநேயர் இவ்விடத்தில் நிறுவிய வரலாறு குறிப்புகள் மற்றும் ஸ்ரீ ராமபிரானின் சீடர்களான இவர்களுக்கு சிலை வைத்து, மேடை சன்னதி அமைத்து காலங்காலமாக ஸ்ரீராம ஸ்ரீ கருடாழ்வாரை வணங்கி வருகின்றனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீராம ஸ்ரீகருடாழ்வாரை வணங்குவதற்கு பல்வேறு இட பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை புரிந்து பூஜை செய்து வணங்கி செல்கின்றனர். ஆனி 16, ஜூன் 30ம் தேதி ஸ்ரீராம ஸ்ரீகருடாழ்வாரின் குருபூஜை, தணிகாசலம் தலைமையேற்று, பாட்டாளி மக்கள் கட்சி, மாவட்ட அமைப்பு தலைவர் – வன்னியர் சங்கம் டி.எஸ்.தண்டபாணி தலைமையில் விழா ஏற்பாடுகள் வண்ண விளக்குகள் ஜொலிக்க, பஜனைகள் பாட, சிறப்பு அலங்காரங்கள் பூஜைகள் ஐந்து வகையான அன்னதானங்கள் வழங்கி விமர்சையாக நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி மலர் மாலை அணிவித்து கௌரவப்படுத்தினர். இந்த குரு பூஜையில் மோகன், சின்ன அல்லாபுரம் வேலுமணி, அய்யாசாமி (ஓய்வு), ராஜேந்திரபாபு, தென்னிந்திய பத்திரிகையாளர் சங்க மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சியின் மாவட்ட செயலாளரும், ஸ்ரீராம பக்தனும், பத்திரிக்கை செய்தி உதவி ஆசிரியரும், சமூக ஆர்வலருமான டாக்டர். ராஜ்பாபு பானுநந்தினி மற்றும் விழா குழுவினர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு ஸ்ரீராம ஸ்ரீ ஜெயகருடாழ்வார் குரு பூஜையை சிறப்பித்தனர்.