தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தேர்வில் மாவட்டத்தில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 329 மாற்று திறனாளிகள் எழுதினர். இதில் 304 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தத் தேர்வில் தருமபுரி அரசு மாதிரி பள்ளி மாணவன் இன்ப சேகர் 446 மதிப்பெண் பெற்று முதலிடமும், பொ. குறிஞ்சிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் உமர் 397 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும்,அரசு மாதிரி பள்ளி மாணவி வசுமதி 395 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பெற்றனர். இந்த மாற்றுத்திறனாளிகளில் பொ.துரிஞ்சிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் உமர் இரண்டு கால்கள் இல்லாமலும், கைகளும் குறைபாடுடன் தேர்வு எழுதினார். அவர் தமிழில் 62 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 70 மதிப்பெண்களும், கணிதத்தில் 92 மதிப்பெண்களும், அறிவியலில் 85 மதிப்பெண்களும், சமூக அறிவியலில் 88 மதிப்பெண்களும் பெற்று 397 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இதை அடுத்து இந்த சாதனை மாணவனை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் வட சந்தையூரில் உள்ள உமரின் வீட்டிற்கு நேரில் சென்று பாராட்டினார். அப்போது பூங்கோத்து கொடுத்து பொன்னாடை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார் .மேலும் உயர் கல்விக்காக அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று ஆட்சியர் உறுதி அளித்தார்.அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் செண்பகவள்ளி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்னர் உமர் கூறுகையில் என்னுடைய தந்தை மோட்டார் சைக்கிள் மெக்கானிக் இனாயத், தாய் ஷர்மிளா, சகோதரர் ஜூபையர் ஆவர். பிளஸ் ஒன் வகுப்பில் கணித பிரிவில் சேர விரும்புகிறேன் உயர் கல்வி முடித்து கலெக்டர் ஆக வேண்டும் என்பதை எனது லட்சியம் என்னை போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கும், மக்களுக்கும் சேவை செய்வேன் என்றார்.



