நித்திரவிளை டிசம்பர் 18
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள காஞ்சாம்புறம் புனித குழந்தை தெரசாள்சாள் ஆலய வளாகத்தில் வைத்து சிறுமலர் இளைஞர் இயக்கம் நடத்திய கிரேசியஸ் 2024 மாபெரும் கிறிஸ்மஸ் பாடல் போட்டி நடைபெற்றது.
பாடல் போட்டியின் முதல் பரிசு ரூபாய் 7001/- இரண்டாவது பரிசு ரூபாய் 5001/- மூன்றாவது பரிசு ரூபாய்.3001/- மற்றும் கோப்பை சான்றிதழ் வழங்கப்பட்டது. கிறிஸ்மஸ் பாடல் போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள பாடல் குழுவினர் கலந்து கொண்டனர். முதல் பரிசு மார்த்தாண்டம் என்.எம்.சி குழுவினரும் இரண்டாம் பரிசு மார்த்தாண்டம் துறை புனித செபஸ்தியார் ஆலய குழுவினரும் மூன்றாவது பரிசினை நீடோடி யுனைட்டட் ரிவியூ அணியினரும் வெற்றி பெற்றனர். பங்கு அருட் பணியாளர் அருட்பணி.சுந்தர் சேவியர் வாழ்த்துரை வழங்கி பரிசுகளை வழங்கினார்.
இசை ஆசிரியர் இவாஞ்சலின்,ஜெபின் ஆபிரகாம் மற்றும் கலை ஆர்வலர் ஜோணி அமிர்த ஜோஸ் ஆகியோர் நடுவர்களாக பயணித்தனர்.பாடல் போட்டியின் இடையே சிறப்பு நிகழ்வாக பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக இளைஞர் இயக்கத்தின் நாட்டியம் இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கத்தின் நாட்டியம் கிராம முன்னேற்ற சங்கத்தின் நாட்டியம் மற்றும் உலக சாதனையாளர் கலை இளமணி ஜோ.ஸ்.தீரஜ் ன் இசையுடன் பாடல் நடைபெற்றது. பார்வையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக பார்வையாளர்களிடம் ஆன்மீக கேள்விகள் கேட்கப்பட்டு சரியான பதில் கூறியவர்களுக்கு பரிசுகள் வழங்ப் பட்டது.வரவேற்ப்புரை நன்றியுரை நிகழ்ச்சி தொகுப்பு ஆகியவற்றை இளைஞர் இயக்க மாணவிகள் நிகழ்த்தினர்.இந்நிகழ்வில் ஆலய உறுப்பினர்கள், ஊர்மக்கள், அருட் சகோதரிகள், இளைஞர் இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.