களியக்காவிளை, டிச- 24
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் குமரி சோதனை சாவடிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கேரளா மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது பெரும் சட்டைக்கு உள்ளான நிலையில் குமரி மாவட்டத்திலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று (23-ம் தேதி) கேரளாவில் இருந்து ஹோட்டல் வேஸ்ட் ஏற்றி வந்த தமிழக பதிவெண் கொண்ட கன்டெயினர் லாரி மற்றும் செப்டிக் டேங்க் வேஸ்ட் ஏற்றி வந்த வாகனம் என இரண்டு வாகனங்களை குமரி களியக்காவிளை சோதனை சாவடியில் தடுத்து நிறுத்திய காவல்துறை இரு வாகனங்களையும் பறிமுதல் செய்து இந்த வாகனங்களை ஓட்டி வந்த திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்ட தேவா, வள்ளி முருகன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.