இராமநாதபுரம்அக் 09-
வறட்சியும் வறுமையும் ஆறத் தழுவிக் கொண்டிருக்கும், இராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ச்சியையும் பசுமையையும் மீட்டெடுக்கும் உளமார்ந்த முயற்சி
மதுரையை மையமாகக் கொண்டு செயல்படும் VAPS தொண்டு நிறுவனமும், மும்பையை மையமாகக் கொண்டு செயல்படும் CMS அறக்கட்டளையும் இணைந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசுமை ஆர்வலர்கள், வனத்துறை, ஊரக உள்ளாட்சித் துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் சுய உதவி குழு பெண்கள். கிராம பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒருங்கிணைந்து பசுமையை மீட்டெடுக்கும் முயற்சியாக 10000 நாட்டு மற்றும் பாரம்பரிய மரக்கன்றுகளை நடவு செய்து அதனை பராமரித்து காக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வெள்ளா கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட கதைக்குளம் கிராமம், காமாட்சி அம்மன் கோவில் பகுதிகளில் சுமார் 2000 மரக்கன்றுகள் நடப்பட்டது. இதனை VAPS நிறுவனம் CMS நிறுவனத்தின் சமூக பாதுகாப்பு நிதியின் மூலம், திருப்புல்லாணி வட்டார ஊராட்சி ஒன்றியம் மற்றும் வெள்ளா கிராம ஊராட்சி மன்றம் மாவட்ட வனத்துறையுடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது பசுமையை மீட்டெடுக்கும் முயற்சியின் ஆரம்பம் ஆகும்.
தொடர்ந்து இது அனைவரின் ஒத்துழைப்புடனும் பசுமை ஆர்வலர்களின் உதவியுடனும் அடுத்த நிலைக்கு நகரும் இந்த நிகழ்ச்சியில் VAPS நிறுவனத்தின் செயலர் S.A. அருள், திட்டத் தலைவர் T ஆசைத்தம்பி. மாவட்ட வனத்துறை அலுவலர் S. ஹேமலதா, CMS மதுரை கிளை மேலாளர்,வேல்முருகன், திருப்புல்லாணி யூனியன் சேர்மன். திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் S முருக தேவி வெள்ளா பஞ்சாயத்து தலைவர் D. வீரபாண்டி, காமாட்சி அம்மன் கோவில் அறங்காவல் குழு தலைவர் செந்தில் குமார் ஆகியோர் பங்கேற்றனர். இதில் பசுமை ஆர்வலர் சுபாஷ் சீனிவாசன்விழா ஏற்பாடுகளை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் p.சுந்தர் ராஜன் செய்து இருந்தார். கலந்து கொண்டார்.