ராமநாதபுரம், பிப்.8-
பிப்ரவரி 7 மனிதநேய மக்கள் கட்சி 17 ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்வு மனிதநேய மக்கள் கட்சி தொண்டி பேரூர் தலைவர் சையது முகமது காதர் தலைமையில் தொண்டி பேரூர் அலுவலகத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டி பேரூர் செயலாளர் உ .பரக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். மகளிர் அணி மாவட்ட செயலாளர் சகோதரி செரிஃபா ஜைனுலாப்தீன் ஊடக பிரிவு பஹுருல்லாஹ் தமுமுக. செயலாளர் மைதின், அலாவுதின் பாசி நெய்னா, சேனா முஸ்தபா ஜலால் ரிஸ்வான் அசன் கிழக்கு பகுதி தலைவர் அஹமது இப்ராஹிம் 1 வது வார்டு PV MR,பட்டனம் தலைவர் சலிம் மற்றும் தொண்டி பேரூர் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி கழகத்தின் கொடியை ஏற்றினார்.தமுமுக மாநில செயளாளர் தொண்டி சாதிக் பாஷா மனிதநேய மக்கள் கட்சி வரலாறு பற்றியும் அனைத்து சமூக மக்களின் பேராதரவை பெற்ற மனிதம் போற்றும் மனிதநேய மக்கள் கட்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தமிழகத்தின் அனைத்து மக்களுக்காக ஜாதி மத பேதமின்றி பணிகள் செய்து நல்லுள்ளம் கொண்ட அனைத்து மக்களின் பேராதரவோடு 17 ஆம் ஆண்டு தொடங்க இருக்கும் வேளையில் இன்னும் அதிகப்படியான தோழர்களை மனித நேய மக்கள் கட்சியில் இணைத்து பணியாற்ற வேண்டும் என்று கூறினார். மேலும் அன்பாலயா உண்டு உறைவிடப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது மனிதநேய மக்கள் கட்சியின் 14 வது வார்டு கவுன்சிலர் பானு 15 வது வார்டு கவுன்சிலர் பெரியசாமி ஆகியோர் இனிப்புகளை வழங்கினர். மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டி பேரூர் உட்பட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். மமக தெற்கு பகுதி தலைவர் ஆட்டோ சபிர் நன்றி கூறினார்