சங்கரன்கோவில் சங்கரன்கோவிலில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பக்தர்களின் கோரிக்கையை ஏற்று அம்மன் சன்னதியில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிப்பிடங்கள் கட்டப்பட்டு அதை பொதுமக்கள் பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கோயில் துணை ஆணையர் கோமதி தலைமை வகித்தார். திமுக மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் செண்பக விநாயகம், சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி முன்னிலை வகித்தனர் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய கழிப்பிட கட்டிடத்தை பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணை செயலாளர் மனோகரன், மாவட்ட பொருளாளர் சரவணன், நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் சேர்மத்துரை, ராமச்சந்திரன், சிவகிரி பேரூர் செயலாளர் சேது சுப்பிரமணியன், கோயில் கண்காணிப்பாளர் ராஜகோபால், கோயில் பொறியாளர் முத்துக்குமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் உதயகுமார் சுற்றுச்சூழல் அணி தலைவர் விஜய பாண்டியன், தொண்டர் அணி அமைப்பாளர் அப்பாஸ் அலி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜலால் , நகர துணை செயலாளர் சுப்புத்தாய் மற்றும் ஜெயக்குமார், பாலாஜி, ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



