வேலூர்=12
வேலூர் மாவட்டம், வேலூர் ஊரீஸ் கல்லூரியில் 126வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது இதில் சிறப்பு அழைப்பாளர் மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சாஜித் கல்லூரியின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி படிப்பு, கலை, நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளில் ,சிறந்த விளங்கிய மாணவர்கள், மாணவியர்களுக்கு , சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கினார். கல்லூரியில் 25 ஆண்டுகள் சிறப்பாக நிறைவான பணி செய்த ஆசிரியர்களையும் , பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கும் பணியாளர்களுக்கும் கல்லூரியின் சார்பில் பாராட்டுக்கள் தெரிவித்து கௌரவித்தனர். நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர், துணை முதல்வர், மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.