ஈரோடு செப் 8
ஈரோடு மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் 36 ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஈரோடு சம்பத் நகர் பகுதியில் கணபதி ஹோமத்துடன் 10 அடி ஸ்ரீ வீர விநாயகர் திருமேனி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் . மாவட்ட செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச்செயலாளர் கார்த்தி ,மாவட்ட செயலாளர் வக்கீல் முரளி ஆகியோர் கலந்து கொண்டனர்
இதற்கான ஏற்பாடுகளை நகர தலைவர் பிரேம்குமார் செய்திருந்தார்.
ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பாக 1008 இடங்களிலும் ஈரோடு நகரில் 200 க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களிலும் விநாயகர் திருமேனி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கருங்கல்பாளையம் பழைய காவல் நிலையம் அருகில் 10 அடி ஸ்ரீ ஆஞ்சநேய விநாயகர் ,மாணிக்கம் பாளையம் காந்தி நகர் 9 அடி ஸ்ரீ செல்வ விநாயகர், பெரிய வலசு சுப்பிரமணி நகர் 9 அடி ஸ்ரீ கோமாதா விநாயகர் அக்ரஹாரம் மாரியம்மன் கோவில் அருகில் 9 அடி ஸ்ரீ கருட விநாயகர்,கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் 9 அடி ஸ்ரீ வெற்றி விநாயகர் திருமேனி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.



