கோவை, செப்.14.
பொள்ளாச்சி பட்டாசு வணிகர்கள் நலச்சங்கம் சார்பில், வால்பாறை சாலை ரங்கசமுத்திரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் சங்க உறுப்பினர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத் தலைவர் கே.சி. செல்வகுமார், செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் சேதுராமன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் பட்டாசு தொழிலை மேம்படுத்துவது, குறுகிய காலத்தில் உரிமம் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது, பட்டாசுக் கடைகளை பாதுகாப்பான முறையில் அமைப்பது, தேவையான பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து உறுப்பினர்களிடையே கலந்துரையாடப்பட்டது. மேலும், பட்டாசு வணிகர்களின் நலன் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.



