நாகர்கோவில் – பிப் – 26,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ – ஜியோ கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் 10 – அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித்தர கேட்டு ஒருங்கிணைப்பாளர்கள் பென்னட் ஜோஸ், மற்றும் தியாகராஜன் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைளாவன :-
01.04. 2003 – க்கு பிறகு அரசுப் பணியில் சேர்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்த வேண்டும், காலவரையின்றி முடக்கு வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட கேட்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஓன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும், தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பதிப்பினை ஏற்ப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளி கலவித்துறை அரசாணை எண் 243 ஐ ரத்து செயத்திட கேட்டும் , ஊதிய முறன்பாட்டை களைய கேட்டும், கல்லூரிப் பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணி மேம்பாடு ஊக்க ஊதிய உயர்வு உடனடியாக வழங்கிட கேடும், உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும், அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும், 2002 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் பணிக் காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித்தர கேட்டு ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் உயர்மட்டக் குழு உறுப்பினர் பெனின் தேவகுமார் துவக்க உரையாற்றினார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார், மாவட்ட தலைவர் வேலவன், மாவட்ட செயலாளர் டோமினிக்ராஜ், மாவட்ட செயலாளர் சுமகாசன், மாவட்ட துணை பொது செயலாளர் எட்வின் பிரகாஷ், மூட்டா ராஜசேகரன், மாநில செயலாளர் நாகராஜன், மாநில துணைத்தனவர் உபால்ட், மாவட்ட செயலாளர் சுரேஷ், இராஜ குமார், அரசு பணியாளர் சங்கம் தனசேகர் உள்ளிட்டோர் போராட்ட உரை நிகழ்த்தினர் . மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் சுபின் நிறைவுரை ஆற்றினார். ஜாண் கிறிஸ்டோபர் நன்றியுரை ஆற்றினார்.