வேலூர், ஜூலை 04 –
வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டையிலுள்ள அரசு அருங்காட்சியகம் விரிவாக்கம் செய்யப்பட்டது. 2.50 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த அரசு அருங்காட்சியகத்தினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வினோத் கண்ணா, சுதாகர், சிந்து, தென்றல் குமார், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் அருங்காட்சியகத்தை அமைச்சர் விஜய் பாலாஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த விரிவாக்கம் செய்யப்பட்ட அருங்காட்சியகம் மாணவர்கள் சுற்றுலா பயணிகள் ஆகியோர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த விழா முடிந்து செய்தியாளர்கள் அமைச்சர் விஜய் பாலாஜியை பேட்டி எடுக்க முயன்ற போது பேட்டியை தவிர்த்து காரில் ஏறி சென்றார்.



