விளாத்திகுளம், பிப்ரவரி 18 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் பாஜக சார்பில் மத்திய அரசு சாதனை மற்றும் பட்ஜெட் விளக்க சக்தி கேந்திர தெருமுனை கூட்டம் நடைபெற்றது. சக்தி கேந்திர பொறுப்பாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். பாஜக வடக்கு ஒன்றிய தலைவர் காட்டுராஜா முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்வில் பாஜக மாவட்ட தலைவர் சரவணகிருஷ்ணன், பொதுச் செயலாளர் சேது ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, ஒன்றிய பிரதிநிதி கனகவேல்ராஜ், பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் கந்தசாமி, ஓ பி சி மாவட்டத் துணைத் தலைவர் அருணாச்சலம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் செல்வி நேதாஜி, அஇஅதிமுக ஒன்றிய செயலாளர்கள் மகேஷ், பால்ராஜ், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் பிரியா, மகளிர் அணி மேற்கு ஒன்றிய செயலாளர் சாந்தி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் சேகர், ஜான்பாண்டியன் கட்சி ஒன்றிய செயலாளர் செல்வம் மற்றும் பாஜக நிர்வாகிகள், அஇஅதிமுக நிர்வாகிகள், அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



