விருதுநகர், நவ. 10 –
விருதுநகர் நகராட்சி 5 வது வார்டு நேதாஜி நகர் பகுதியில் மக்கள் பயன்பாட்டில் செயல்பட்டுக் கொண்டிருந்த (RO Plant) தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த இரண்டு வருடங்களாக செயல்படாமல் இருப்பதால் மக்கள் வரிப்பணம் வீணாவது மட்டுமின்றி பொதுமக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் இது குறித்து வார்டு கவுன்சிலர் இடம் கூறிய பொழுது சமூக அக்கறையின்றி மின் மோட்டார் அடிக்கடி பழுதாகி வருகிறது என கூறி வருகிறார். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் சுத்திகரிப்பு நிலையத்தை முறைப்படி பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



