சுசீந்திரம், செப். 15 –
சுசீந்திரம் அருகே உள்ள நல்லூர் அத்தாணிமார் குளத்தை சார்ந்தவர் நாகராஜன் (55). இவர் தனியார் வாகன ஓட்டுநர் வேலை செய்து வருகிறார். நல்ல குடிப்பழக்கம் உடையவர். குடித்துவிட்டு சரிவர வீட்டிற்கு செல்வதில்லை என தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் வேலைக்கு சென்றவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இவரது மனைவி செல்வி (51) பல இடங்களில் தேடியும் உறவினர் வீடுகளில் தேடியும் அவர் இல்லை.
இந்நிலையில் நேற்று காலை அத்தாணிமார் குளம் வீட்டு அருகே உள்ள தண்ணீர் ஓடையில் இறந்து கிடந்து உள்ளார். உடனடியாக செல்வி சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


