குளச்சல், மே 2 –
கருங்கல் பகுதியை சேர்ந்தவர் பினு (47). தொழிலாளியான இவர் குளச்சல் அருகில் ரீத்தாபுரம் பகுதியில் சொந்தமாக நிலம் வாங்கியுள்ளார். தற்போது அந்த நிலத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டி உள்ளார். பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்த ஜெயன் (44) என்பவர் காம்பவுண்ட் சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில் பினு சம்பவ தினம் அந்த பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஜெயன் எனக்கு தெரியாமல் ஏன் காம்பவுண்ட் சுவர் கட்டி கட்டினாய்? என கேட்டு கையில் இருந்த கடப்பாரையால் பினுவை தாக்கி, உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கூறிவிட்டு தப்பி சென்றுள்ளார்.
படுகாயமடைந்தவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


