போகலூர், ஜுலை 5 –
ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை தர்மகர்த்தா ராணி சேதுபதி ராஜேஸ்வரி நாச்சியார் அவர்களுக்கு பாத்தியப்பட்ட ராணி அபர்ணா நாச்சியார் நிர்வாகத்தில் உள்ள ராமநாதபுரம் அருள்மிகு கோதண்ட ராமர் சுவாமி கோயில் ஆனி பிரமோற்சவ விழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோதண்டராமர் சுவாமி கோயில் ஆனி பிரமோற்சவ விழா கடந்த 28-ம் தேதி கணபதி ஹோமம் பூஜை உடன் துவங்கியது. ஜூலை இரண்டாம் தேதி இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆனி பிரம்மோற்சவ முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 8.30 மணிக்கு திவான் பழனிவேல் பாண்டியன் மற்றும் முக்கியஸ்தர்கள் தேரின் வடத்தை பிடித்து இழுத்து தேரோட்டம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். பக்தர்கள் திரளாக தேரின் வடத்தை பிடித்து இழுத்து ராமநாதபுரம் முக்கிய வீதியில் தேர் வலம் வந்து நிலையை அடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.