தஞ்சாவூர், செப்டம்பர் 8 –
தஞ்சாவூரில் முதலமைச்சர் கோப்பைக்கான மண்டல அளவிலான பளு தூக்குதல் போட்டியை மேயர் சண் ராமநாதன் தொடங்கி வைத்தார். திருச்சி மண்டல அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான பளுதூக்குதல் விளையாட்டு போட்டி தஞ்சாவூரில் நடைபெற்றது இதில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த மண்டல அளவிலான போட்டி யைதஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் தொடங்கி வைத்து பேசினார்.
விழாவில் பளு தூக்குதல் போட்டி தேசிய நடுவர் சண்முகவேல், புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் செந்தில்குமார், புதுச்சேரி தேசிய பயிற்சியாளர் ராஜேஷ், நாட்டு நல பணித்திட்ட அலுவலர் குணாநிதி, தமிழ் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் குமரவேல், தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் மற்றும் விளையாட்டு பயிற்சியாளர்கள், வீராங்கனைகள் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் 150 க்கு மேற்பட்ட பளு தூக்கும் வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 3000, 2-வது பரிசாக 2000, 3-வது பரிசாக ரூபாய் 1000 அவரவர் வங்கி கணக்கில் வரும் வரவு வைக்கப்பட உள்ளது.



