கிருஷ்ணகிரி -ஆகஸ்ட் 17-கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி .ஆ.சுமதி சாய் பிரியா, அவர்கள் இன்று 15-08-2024 தேசிய கொடி ஏற்றி, அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சுதந்திர போராட்ட வீரர்களான இராஜாஜி, மொஹமது காசிம், அமனுல்லா கான் ஆகியோரின் தியாகத்தை நினைவு கூர்ந்தார். மேலும் இவ்விழாவில் குடும்ப நல நீதிபதி .S.நாகராஜன், சிறப்பு மாவட்ட நீதிபதி .K.அமுதா மோட்டார் வாகன தீர்ப்பாயம், கூடுதல் மாவட்ட நீதிபதி .V.தாமோதரன், விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி .V.சுதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் .R.சாமுவேல் பெஞ்ஜமின், சார்பு நீதிபதி .N.மோகன்ராஜ், வழக்குரைஞர் சங்க தலைவர் .G.கோவிந்தராஜீலு, சங்க செயலாளர், .V.சத்தியநாராயணன், மூத்த வழக்குரைஞர்கள், வழக்குரைஞர்கள், வழக்குரைஞர் எழுத்தர்கள், காவல் துறையினர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நீதித்துறை ஊழியர்கள் அனைவரும் பங்கு கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர். இவ்விழாவிற்கு மாவட்ட உரிமையியல் நீதிபதி .G.யுவராஜ் அவர்கள் வரவேற்புரையாற்றியனார், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.2 .A.ஸ்ரீவஸ்தவா அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். இறுதியாக கூடுதல் சார்பு நீதிபதி.P.T.ஜெனீபர் அவர்கள் நன்றியுரையாற்றினார்.



