மார்த்தாண்டம், டிச.1 –
மார்த்தாண்டம் அருகே செம்மண் விளை பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன். இவரது மூத்த மகளை சூரியகோடு பகுதியை சேர்ந்த சஜின்குமார் (34) என்ற முன்னாள் ராணுவ வீரருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த நிலையில் சஜின் குமார் தனது மனைவியை அடித்து துன்புறுத்துவதாக கூறி தாய் வீட்டிற்கு வீட்டில் சென்று சஜின் குமார் மனைவி தங்கி உள்ளார்.
இதனால் சஜின்குமார் மற்றும் அவருடன் அபின் (24) ஆகியேர் சேர்ந்து சம்பவ தினம் மனைவியின் தாயார் வீட்டுக்கு சென்று தகாத வார்த்தைகள் பேசி மனைவி மற்றும் மாமியார் ராஜம் என்பவரையும் தாக்கி விட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த ராஜம், மகள் ஆகியோர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் சஜின் குமார் மற்றும் அபின் மீது வழக்கு பதிவு செய்து, சஜின் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றவரை தேடி வருகின்றனர்.


