மார்த்தாண்டம், நவ. 27 –
மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியை சேர்ந்தவர் அருள் ஜானி பிரசாத் (48). கார் டிரைவர். சம்பவ தினம் இவர் காரில் சவாரிக்கு சென்று விட்டார். அன்று இரவு மனைவி மற்றும் மகள் வீட்டின் மேல் மாடியில் தூங்க சென்றனர். அப்போது நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டு கேட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டு கதவையும் உடைத்து உள்ளே புகுந்து அங்க வைக்கப்பட்டிருந்த 3 பவுன் நகை, சாம்சங் டேப், மேஜைமேல் இருந்த காரின் மற்றொரு சாவி மற்றும் ரூ 7000 ஆகியவற்றை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
அதிகாலையில் சவாரி முடித்து வீட்டுக்கு வந்த அருள் பிரசாத் வீட்டில் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்து போது நகை பணம் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


